சூடான செய்திகள் 1

இலங்கையின் மேல் மாகாணத்தில் தொழு நோயாளிகள் அதிகரிப்பு!

(UTV|COLOMBO) நாடாளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ள தொழு நோயாளர்களில் நூற்றுக்கு 10 சதவீதமானோர் 15 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் என தெரியவந்துள்ளது.

இதில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதாக தொழு நோய் ஒழிப்பு பிரிவின் சமூக நிபுணர், மருத்துவர் சுபுன் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் ஆயிரத்து 683 தொழு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நோய் அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே தொழு நோயிற்கு சிகிச்சை பெற வேண்டும்.

ஆனால் ஆறு மாதங்களுக்கு மேல் காலதாமதமடைந்து சிகிச்சைப்பெற வரும் நோயாளர்களின் எண்ணிக்கை நூற்று 30 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொழுநோய் ஒழிப்பு குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…

அனைத்து பயணிகள் விமானம் – கப்பல்கள் இலங்கைக்கு வரத் தடை

விசாக நோன்மதி தினம் – கொழும்பில் 5 வெசாக் வலயங்கள்