உள்நாடு

இலங்கையின் பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பு

சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஜூன் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2024 மே மாதம் 1.6% ஆக பதிவாகிய இலங்கையின் பணவீக்கம் 2024 ஜூன் மாதம் 2.4% ஆக அதிகரித்துள்ளது.

மே 2024 இல் 0.5% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் ஜூன் 2024 இல் 1.9% ஆக அதிகரித்துள்ளது.

மேலும், உணவு அல்லாத வகையின் பணவீக்கம் மே 2024 இல் 2.4% ஆக இருந்து ஜூன் 2024 இல் 2.7% ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பல பகுதிகளில் நாளை 16 மணி நேரம் நீர் வெட்டு

கந்துருகஸ்ஹார சிறைச்சாலையில் கைதி உயிரிழந்த சம்பவத்தில் மூவர் பணி நீக்கம்

ஜயம்பதியின் வெற்றிடத்திற்கு சமன் ரத்னப்பிரிய நியமனம்