சூடான செய்திகள் 1

இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றது. – அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-பல்கலைக்கழகம் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத மாணவர்களின் அறிவுத் தாகத்தை தீர்த்து வைத்து அவர்களை கல்விச்சமூக அந்தஸ்துக்குக் கொண்டுவர தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் பெரிதும் துணைபுரிகின்றது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்கா சர்வதேசமாநாட்டு மண்டபத்தில் அமேசன் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் கூறியதாவது,

 

இலங்கையின் கல்வித்துறை முறைமையின் காரணமாக வருடம் தோறும் சுமார் 5 தொடக்கம் 6 சதவீதமான மாணவர்களே பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர்.  எஞ்சியோர் உயர் கல்வி பெற வாய்ப்பில்லாமையால் அவதியுறுகின்றனர். இதனை ஈடு செய்யும் வகையில் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி பட்டங்களை வழங்கி வருகின்றன.

 

படித்துவிட்டு பல்கலைக்கழகம் செல்ல முடியாது விரக்தியிலும் மனக்கவலையிலும் இருக்கும் மாணவர்களுக்கு இவ்வாறான தனியார் பல்கலைக்கழகங்கள் கைகொடுத்து வருவது மகிழ்ச்சி தருகிறது. அந்த வகையில் கொழும்பில் இயங்கும் அமேசன் கல்லூரியும் இவ்வாறான மாணவர் சேவையை கல்வி மேம்பாட்டு நோக்கில் நடாத்தி வருவது பெருமைக்குரியது. இந்த சந்தரப்பத்தில் இந்தக் கல்லூரியின் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் மற்றும் ஆசிரியர் குழாமிற்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன்.

 

இன்றைய பட்டமளிப்பு விழாவில் பட்டம்பெறும் மாணவர்கள் தமது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தையும் புதிய பயணத்தையும் தொடங்குகின்றனர்.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் இலங்கையின் கல்வித்துறையை மேம்படுத்தி உலக நாடுகளுடன் நாம் போட்டிபோடக்கூடியவாறான பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. வளர்முக நாடுகளிலே இலங்கையானது கல்வித்துறையில் ஒப்பீட்டளவில் உயர்ந்த அடைவைக்கொண்டிருந்தாலும் அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் நாம் போட்டி போடக்கூடிய ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.

 

நமது நாட்டில் கல்வியியலாளர்களையும் புத்திஜீவிகளையும் அதிகரிப்பதற்கு இவ்வாறான கல்லூரிகள் மிகவும் காத்திரமாக பங்களிப்பை நல்குகின்றன. கல்வித்துறையில் மேம்பாடடைந்தால் நாம் பொருளாதாரதுறையிலும் நாம் சிறப்பன வளர்ச்சியை அடைந்துகொள்ள முடியும் என நம்புகின்றேன்.’

 

இந்நிகழ்வில் கலாநிதி மரைக்கார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைர்தீன், மாகாணசபை உறுப்பினர் பாயிஸ், உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கலந்து கொண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஸ்ரீ. சு. கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் நாளை

சேவையில் இருந்து விலகிய முப்படையினருக்கு பொது மன்னிப்பு காலம் இன்று முதல் ஆரம்பம்

மரண தண்டனைக்கு எதிரான மனுவை விசாரணை செய்ய 05 நீதிபதிகள் கொண்ட குழு