உள்நாடு

இலங்கைக்கு வந்துள்ள IMF பிரதிநிதிகள் குழு!

(UTV | கொழும்பு) –

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று முதல் ஒரு வார காலம் நாட்டில் தங்கியிருந்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சு, மத்திய வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் பல தரப்பினருடன் பிரதிநிதிகள் கலந்துரையாடவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் இந்த நாட்டின் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் குறித்த ஆய்வு, இந்த பிரதிநிதிகளால் மேற்கொள்ள உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஏப்ரல் 10 நோன்பு பெருநாள் தினத்தை விசேட விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு அரசாங்க பொது சேவைகள் சங்கம் கோரிக்கை…!!!

இலங்கையின் அபிவிருத்திக்காக $50 மில்லியன்

ஒன்லைன் முறையில் பிள்ளைகளுக்கு கவுன்சிலிங்