உள்நாடு

இலங்கைக்கு பாதிப்பு இல்லை

(UTV | கொழும்பு) – கட்டுப்பாட்டை இழந்த சீன ரொக்கட்டானது இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது.

கடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டை இழந்து விண்வௌியில் மிதந்த 30 மீற்றர் நீளமான சீன ரொக்கட்டின் சில பாகங்கள், இன்று காலை 8.50 மணியளவில் இந்திய பெருங்கடலில் வீழ்ந்துள்ளதென, சீன ஊடகங்களை மேற்கோள் காட்டி, ரொய்டர் செய்தி வௌியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலின், மாலைத்தீவுக்கு வடக்கில் இது விழுந்துள்ளதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் குறித்த கடல் பரப்பில் இதுவரை சுனாமி எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 தொன் நிறையுள்ள குறித்த ரொக்கட்டானது, 30 வருடங்களுக்குப் பிறகு விண்வௌியிலிருந்து பூமியில் விழுந்த மிகப்பெரிய கழிவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களில் 4 மாத குழந்தை

மதுபோதையில் வாகனம் செலுத்திய 157 பேர் கைது

ரயில் சேவைகள் செப்டம்பர் முதல் வழமைக்கு