உள்நாடு

‘இலங்கைக்கு ஒரு இருண்ட நாள் வேண்டாம்’ – மேரி லோலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் மேலும் இருவரின் தடுப்புக் காவல் உத்தரவில் கையொப்பமிட வேண்டாம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“மனித உரிமைப் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்மா ஹிமி ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து நான் ஆழ்ந்த கவலையடைகிறேன். அவர்களின் தடுப்புக் காவலில் கையெழுத்திட வேண்டாம் என்று நான் ஜனாதிபதி ரணிலைக் கேட்டுக்கொள்கிறேன், அவ்வாறு செய்வது இலங்கைக்கு ஒரு இருண்ட நாளாகும்…” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

editor

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

editor

தேர்தல் பிரசாரங்கள் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவு

editor