விளையாட்டு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றியது

(UTV | கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானத்து. அதன்படி முதிலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 273 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் தனுஷ்க குணதிலக அதிகபட்சமாக 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். தினேஸ் சந்திமால் 71 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ஜேசன் மொஹமட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு வெற்றி இலக்கை நோக்கிய தொடர் பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 49. 4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது. அவ்வணி சார்பாக ஈவன் லீவிஸ் 103 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். சாய் ஹோப் 84 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் திசர பெரேரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதன்படி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2 க்கு 0 என்ற அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.

Related posts

பங்களாதேஸ் அணிக்கு எதிராக மோதவுள்ள இலங்கை அணி குழாம் அறிவிப்பு

LPL போட்டித் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி

கிளிநொச்சியில் தேசிய கயிறுழுத்தல் போட்டி