சூடான செய்திகள் 1

இலங்­கைக்கு அன்­ப­ளிப்பு செய்­யப்­படும் பேரீத்­தம்­ப­ழத்தை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை

(UTV|COLOMBO) இம்­முறை நோன்பு காலத்திற்காக சவூதி அரசாங்கத்தினால் வழங்கப்படும் பேரீத்தம் பழங்களை கடந்த வருடத்தை விட கூடு­தலான அளவு வழங்குவ­தற்கு இலங்கைக்­கான சவூதி தூதுவர் அப்துல் நாஸிர் பின் ஹுஸைன் அல் ஹாரிஸ்தி இணக்கம் தெரி­வித்­துள்ளார் எனவும், அதே­வேளை சவூதி அரே­பியா நாட்டின் பேரீத்­தம்­பழ அறு­வடைக் காலம் நோன்­புக்கு பிந்­திய நிலையில் இடம்­பெ­று­வதால் பேரித்­தம்­பழம் வழங்கும் நட­வ­டிக்­கைகள் சற்றுத் தாமதம் ஏற்­ப­டலாம். எனினும் அதனை துரி­த­மாக பெற்றுத் தரு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ள­வுள்­ள­தாக அவர் உறு­தி­ய­ளித்­துள்ளார் என முஸ்­லிம சமய விவ­காரம் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரி­வித்தார்.

இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாஸிர் பின் ஹுஸைன் அல் ஹாரிஸ்­தி­யுடன் இடம்­பெற்ற சந்­திப்பின் போது கலந்து கொண்ட அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்­வாறு இதனைத் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்,
கடந்த வருடம் பேரித்­தம்­பழம் அறு­வடைக் காலம் தாம­திக்­கப்­பட்­ட­மை­யினால் நோன்பு காலத்தில் சவூதி அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­படும் பேரித்­தம்­பழம் வழங்­கு­வதில் தாமதம் ஏற்­பட்­ட­துடன் போதி­ய­ள­வி­லான பேரித்­தம்­பழம் இலங்கை முஸ்லிம் மக்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை. எனினும் இம்­முறை அந்த நிலை­யில்­லாமல் கடந்த வருடம் வழங்­கப்­பட்ட 150 மெ. தொன் பேரித்­தம்­ப­ழத்தை விட மேலும் 250 மெ. தொன் பேரித்­தம்­பழம் அதி­க­ரித்துத் தரு­மாறு தூது­வ­ரிடம் முன்­வைத்த வேண்­டு­கோ­ளுக்கு இணங்க தூதுவர் அப்துல் நாஸிர் பின் ஹுஸைன் அல் ஹாரிஸ்தி கூடு­த­லான பேரித்­தம்­ப­ழத்தைப் பெற்றுத் தரு­வ­தற்கு உறு­தி­ய­ளித்­துள்­ளார். துரித கதியில் உரிய காலத்தில் விநி­யோகம் செய்ய அவற்றைப் பெற்றுத் தரு­வ­தற்­கான முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

கடந்த வருடம் புனித நோன்பு காலத்­திற்­கென சவூதி நாட்டு அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­படும் பேரித்­தம்­பழம் தாமதம் ஏற்­பட்­ட­மை­யினால் நான் அர­சாங்­கத்­திடம் முன்­வைத்த வேண்­டு­கோளின் பிர­காரம் முஸ்லிம் மக்­க­ளு­டைய புனித நோன்பு காலத்தின் பெறு­ம­தியை உணர்ந்து இலங்கை அர­சாங்­கத்தின் மூலம் 150 மெ. தொன் பேரித்­தம்­பழம் வழங்கி வைக்­கப்­பட்­டது. அத்­துடன் காலம் தாம­தித்து சவூதி அர­சாங்­கத்தின் பேரித்­தம்­பழம் 150 மெ.தொன் கிடைக்கப் பெற்­றது. ஆனாலும் அது ஏனைய வரு­டங்­களை விட குறைந்­த­ளவே கிடைத்­த­து. இலங்கை அர­சாங்­கத்­தி­னு­டைய பேரித்­தம்­பழம் கிடைக்கப் பெற்­ற­மை­யினால் ஓர­ளவு சமா­ளித்துக் கொள்ள முடிந்­தது.

அதே­வேளை ஹஜ் உம்­ராவின் போது முக­வர்­க­ளினால் இழைக்­கப்­படும் அநீதி தொடர்­பாக சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ளும் போது விசா வழங்கும் உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் என்ற வகையில் இரு நிறு­வ­னங்­களும் இணைந்து நடவடிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் எனவும் தூது­வ­ரிடம் வலி­யு­றுத்திக் கூறி­யுள்­ள­தாக அமைச்சர் ஹலீம் மேலும் தெரி­வித்தார்.

இச்­சந்­திப்­பின்­போது, இலங்­கைக்கு புதிய தூது­வ­ராக வந்து கடந்த காலங்­களில் இலங்கை முஸ்­லிம்­க­ளு­டைய விவ­கா­ரங்கள் தொடர்­பாக துரிதமாக செயற்­பட்டு வரும் தூதுவர் அப்துல் நாஸிர் பின் ஹுஸைன் அல் ஹாரிஸ்தியை பாராட்டி அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமினால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. இதன்போது, அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் எம். எச். எம் பாஹிம், ஹஜ் குழு உறுப்பினர் சட்டத்தரணி எம். ஏ. எம். இல்லியாஸ், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம். ஆர். எம். மலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்ரஷி ஹாஷிம்
தபால் சேவைகள் மற்றும் முஸ்லீம் கலாச்சார அமைச்சு,

 

 

 

Related posts

முக்கிய மூன்று வழக்குகளை விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழு நியமனம்

நாளை மற்றும் நாளை மறுதினம் பாடசாலைகளுக்கு பூட்டு

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் திடீர் முடிவு