உள்நாடு

இலங்கைக்கான விமான சேவைகளை ஜுலையில் ஆரம்பிக்க தயார்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல், சர்வதேச பிரயாணிகளுக்கு, இலங்கை விமான நிலையம் மீளத்திறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே, இலங்கைக்கான விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக, விமான சேவைகள் அறிவித்துள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன், கடந்த வாரம் இடம்பெற்ற பிரயாணத் துறைசார் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது, கலந்து கொண்டிருந்த சர்வதேச விமான சேவைகளின் அங்கத்தவர்கள், தாம் இலங்கைக்கான விமான சேவைகளை ஜுலை 15ஆம் திகதி, மீள ஆரம்பிப்பதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம், இலங்கைச் சுற்றுலா சபை ஆகியன அண்மையில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு கெஹலியவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா : 323 பேர் சிக்கினர்

மஹிந்த ராஜபக்ஷஅடுத்த பிரதமரா? விளக்கமளிக்கும் SLPP