இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கௌரவ இஸொமாடா அகியோ (Isomata Akio) அவர்கள் அண்மையில் (06) கௌரவ சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
இதன்போது சபாநாயகருக்கு அரசாங்கத்துக்கும் ஜப்பான் தூதுவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஜப்பான் மற்றும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவு தொடர்பில் சுட்டிக்காட்டிய ஜப்பான் தூதுவர், எதிர்காலத்திலும் அந்தத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கையின் அபிவிருத்திக்குத் தேவையான ஆதரவுகளை வழங்குவதாகத் தெரிவித்தார்.
அத்துடன், தற்பொழுது இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடல் மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தின் நிர்மாணப்பணிகளை விரைவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜப்பான் தூதுவர் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர், இந்நாட்டின் மக்களுக்கு ஜப்பான் அரசினால் வழங்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியதுடன் அதற்காக ஜப்பானுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
அத்துடன், இரு நாடுகளினதும் பாராளுமன்றங்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை – ஜப்பான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை பத்தாவது பாராளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அதற்கு ஜப்பானின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊழலை ஒழித்தல் மற்றும் தேசிய நல்லிணக்கம் போன்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இதன்போது பாராட்டப்பட்டது.