உள்நாடு

இலங்கைக்காக கடன் சலுகை திட்டத்தை ஆரம்பிக்க Paris Club ஆயத்தம்

(UTV | கொழும்பு) – இலங்கைக்காக கடன் சலுகை திட்டமொன்றை ஆரம்பிக்க பெரிஸ் கிளப் (Paris Club) அங்கத்தவர்கள் தயாராகி வருகின்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Paris Club அங்கத்தவர் அல்லாத இருதரப்பு கடன் வழங்குனர்களுடன் இணைந்து கலந்துரையாடுவதற்கும் Paris Club அங்கத்தவர்கள் குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறித்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள 48 மாத காலத்திற்கான நீடித்த நிதி வசதி குறித்த ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை Paris Club அங்கத்தவர் குழு வரவேற்றுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பரிஸ் கிளப் அல்லாத இருதரப்பு கடன் வழங்குநர்களை பரிஸ் கிளப் ஒருங்கிணைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை பரிஸ் கிளப் வரவேற்றுள்ளது.

கடனாளி நாடுகள் அனுபவிக்கும் கொடுப்பனவு சிரமங்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் நிலையான தீர்வுகளை கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கும் பெரிய கடன் வழங்கும் நாடுகளின் அதிகாரிகள் குழுவே பரிஸ் கிளப் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வட மாகாணம் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிப்பு

ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு மற்றுமொரு குறை

தீப்பந்தம் ஏந்தியவாறு ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

editor