சூடான செய்திகள் 1

இலங்கை வைத்திய சபைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) நீதிமன்ற உத்தரவுப்படி தம்மை பதிவு செய்யாமையின் காரணமாக நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி இலங்கை வைத்திய சபைக்கு எதிராக சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவியால் தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்வரும் மாதம் 06ம் திகதி அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர மற்றும் அர்ஜுன ஒபேசேகர அகியோர் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவியான தில்மி சூரியாரச்சியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற தன்னை பதிவு செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இலங்கை வைத்திய சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த உத்தரவுப்படி தன்னை பதிவு செய்வதற்கு இலங்கை வைத்திய சபை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரரான மாணவியான தில்மி சூரியாரச்சி கூறியுள்ளார்.

இதன்காரணமாக இலங்கை வைத்திய சபை நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

10 ஆம் திகதி விவாதம்

பிரதமர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

ஶ்ரீ.சு.கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் இருந்து ஐந்து  பேர் பதவி நீக்கம்…