சூடான செய்திகள் 1விளையாட்டு

இலங்கை வீரர்களிடம் பாக். அணி தலைவரின் தாழ்மையான வேண்டுகோள்

(UTV NEWS) பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் சப்ராஸ் அஹமட் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களை தம்நாட்டிற்கு வந்து விளையாடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று பாகிஸ்தான் கரச்சி நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த சப்ராஸ் அஹமட் நான் இலங்கை அணி வீரர்களிடம் பாகிஸ்தானுக்கு வரமாறு அழைப்பு விடுகிறேன் மேலும் எமது நாட்டின் பாதுகாப்பு சிறப்பான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தீர்மானிக்கப்பட்ட கால அட்டவணையின் படி போட்டிகள் நடைபெறும் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு லசித் மாலிங்க, ஏஞ்சலோ மெத்தியூஸ் உள்ளிட்ட இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் 10 பேர் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொள்கலன்களை அகற்றுவதற்கு விசேட பாதுகாப்பு

சஹ்ரானின் மகளை தாயின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

பாதுகாப்பற்ற மலசலகூட குழியில் வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழப்பு