அரசியல்உள்நாடு

இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவால் இன்று வியாழக்கிழமை (29) இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அஜித் குமார் டோவல்  இந்தியாவிற்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவை சந்தித்துள்ளார்.

இதன்போது இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் உத்தேச திட்டங்கள் அடங்கிய அறிக்கையை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வழங்கியுள்ளார்.

வீதி, ரயில் மார்க்கம், மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகிய பிரிவுகளின் கீழ் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நேரடி தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பின் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார தொடர்புகள் வலுப்பெற்று இலங்கையின் வருடாந்த பொருளாதார வளர்ச்சி வேகத்தை 3 வீதத்தில் இருந்து 6 வீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவல், இன்று மாலை தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களைச்  சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு

இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை

இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில்வாய்ப்பு