சூடான செய்திகள் 1விளையாட்டு

இலங்கை ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கேன் வில்லியம்சன் (video)

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொணடுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் முன்று டெஸ்ட் மற்றும் மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் நேற்று கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப் படையின் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி போட்டி நடைபெற்றது.

இந்த பயிற்சிப் போட்டியின்போது களத்தடுப்பில் ஈடுபட்ட கேன் வில்லியம்சன் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க கேக் வெட்டி தனது 29 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

கேன் வில்லியம்சனின் இந்த செயலானது இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதுடன், பல வீரர்களில் இந்த செயலுக்காக பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஸ்மித், வோனர் இருவருக்கும் 1 வருட போட்டித்தடை

JustNow: நாட்டைவிட்டு தப்பிக்க முயன்ற நதாஷா நள்ளிரவில் அதிரடியாக கைது!!

முதல் போட்டியில் இருந்து பாபர் அசாம் விலகல்