உள்நாடு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கந்தக்காட்டுக்கு

(UTV | கொழும்பு) – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இடம்பெற்ற மோதல் நிலை குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழு இன்று அங்கு செல்லவுள்ளது.

குறித்த மோதல் சம்பவம் தொடர்பிலும், தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலும், விசாரணைகளை முன்னெடுப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பெருமளவானோர் தப்பிச் சென்றிருந்தனர்.

இதையடுத்து, பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளில், 653 பேர் மீளவும் பொறுப்பேற்கப்பட்டதுடன், 70 பேர் தொடர்ந்தும் தேடப்படுகின்றனர்.

பொலிஸ், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்தும் தேடுதல்களை முன்னெடுத்து வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

 ஹிஸ்புல்லாஹ் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

சம்பிக்கவின் கைது தொடர்பில் சபாநாயகருடன் ஐ.தே.க கலந்துரையாடல்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய இல்லத்தில் மரணம்!