சூடான செய்திகள் 1

இலங்கை- பிலிப்பைன்ஸிற்கும் இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சாத்து

(UTV|COLOMBO)-பிலிப்பைன்ஸிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(16) அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேர்டேவை (Rodrigo Duterte) சந்தித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேர்டேயின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த உத்தியோகப்பூர்வ சந்திப்பின் போது ஐந்து உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, சுற்றுலா, விவசாயம் மற்றும் கல்வி ஒத்திழைப்பை மேம்படுத்தும் வகையில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இரண்டு நாடுகளுக்கும் நன்மை கிட்டும் வகையில், உறவுகளை பலப்படுத்துவது தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், பிலிப்பைன்ஸ் தூதரகமொன்றை கொழும்பில் ஸ்தாபிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார வர்த்தக உறவுகளை புதிய திட்டங்கள் மூலம் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பொருளாதார சபையொன்றை உருவாக்குவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு [UPDATE]

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி விளக்கமறியலில்