உள்நாடு

இலங்கை தொடர்பில் இன்று வாக்கெடுப்பு

(UTV | கொழும்பு) –   ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (06) நடைபெறவுள்ளது.

இதேவேளை, இலங்கை தொடர்பிலான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இன்று(06) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதிகாரமிக்க சில நாடுகள் இணைந்து இந்தப் பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக ஜெனீவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று(05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மசிடோனியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பான தீர்மானத்தை தயாரித்துள்ளன.

இதேவேளை, குறித்த பிரேரணைக்கு இலங்கை தனது ஆட்சேபனையை முன்வைக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.

Related posts

2020 : 6 புதிய அரசியல் கட்சிகளை பதிவு

மின்சார சபையினரின் போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு

இராஜதந்திரிகள் எவரும் கண்காணிக்கப்படவில்லை