சூடான செய்திகள் 1

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி யினால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழுவினர் நேற்று முன்தினம்  (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதியிடம் அறிக்கையினை கையளித்தனர்.

இக் குழுவின் தலைவரான கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஒய்வுபெற்ற பொருளியில் துறை பேராசிரியர் தேசமான்ய டபிள்யு.டி.லக்ஷமன் அவர்களினால் அவ்வறிக்கை ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், அக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

 

 

 

 

Related posts

23ம் திகதி விசேட விடுமுறை

editor

அமைச்சர்கள் முன்வைக்கும் அமைச்சரவை பத்திரங்களை ஆய்வு செய்ய விசேட குழு

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு