வணிகம்

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 83000 முதல் 84000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்கூலியுடன் சேர்த்து ஒரு பவுன் தங்கத்தின் விலை 90000 – 100000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்னர் தங்கம் ஒரு பவுனின் விலை 70,000 ரூபாவுக்கு விற்பனையாகியுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கருங்கல் அகழ்வு அமைய வேண்டும்

இலங்கை SURADO CAMPUS நன்கொடையாக வழங்கிய அச்சு இயந்திரம்

கம்பஹா, கேகாலை மாவட்டங்களில் துரியான் செய்கை