சூடான செய்திகள் 1

இலங்கை கிரிக்கெட் உள்ளிட்ட 09 நிறுவனங்கள் கோப் குழு முன்னிலையில்

(UTVNEWS | COLOMBO) – சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் உள்ளிட்ட 09 நிறுவனங்களை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம், ஹிஸ்புல்லாஹிற்கு சொந்தமான ஹிரா அறக்கட்டளை மற்றும் இலங்கை கிரிக்கெட் உள்ளிட்ட நிறுவனங்களே கோப் குழுவின் முன் அழைக்கப்பட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் நாளை(03) கோப் குழுவில் முன்னிலையாகுவார்கள். மட்டக்களப்பு வளாகம் மற்றும் ஹிரா அறக்கட்டளை அதிகாரிகள் செப்டம்பர் 17ஆம் திகதி முன்னிலையாகவுள்ளனர்.

தேசிய சேமிப்பு வங்கி மற்றும் மக்கள் வங்கியின் அதிகாரிகள் முறையே செப்டம்பர் 04 மற்றும் 05 ஆகிய திகதிகளில் கோப் முன் அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அணுசக்தி ஆணையத்தின் அதிகாரிகள் செப்டம்பர் 18ஆம் திகதியும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியக அதிகாரிகள் செப்டம்பர் 19ஆம் திகதியும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கோப் அமர்வுகளை ஊடகங்கள் அறிக்கையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நூறு கோடிக்கும் அதிகமான ஹெரோயினுடன் ஐவர் கைது

பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சம்பளம் ஒருபோதும் அதிகாரிக்கப்பட மாட்டாது

மினுவாங்கொட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 7 பேர் பிணையில் விடுதலை