உள்நாடு

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் பயணத்தடை

(UTV | கொழும்பு) – இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து பிரவேசிக்கும் பயணிகள் விமானங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியம் விதித்திருந்த தடை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

டுபாயின் முன்னணி விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் குறிப்பிட்ட சில பயணிகள் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கடந்த 14 நாட்களில் இலங்கை உள்ளிட்ட அந்த நாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் வேறு எந்த இடத்திற்கும் பயணிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

   

Related posts

“எதிர்வரும் 2ம் திகதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”

ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே இப்போதும் மக்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு – சஜித்

editor

ஐ.எம்.எப் இன் கடனை பெற்றுக்கொள்வது தொடர்பில் சாதகமான பேச்சு – செஹான் சேமசிங்க .