வகைப்படுத்தப்படாத

இலங்கை, இந்தியாவுக்கும் இடையில் நிலவும் கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு காரணம் இதுவா?

(UDHAYAM, COLOMBO) – இலங்கை இந்திய கடல்சார் உடன்படிக்கைகளில் கடற்றொழில் ஒத்துழைப்பு தொடர்பான இணக்கப்பாடு ஏற்படுத்தப்படாமையே தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

த மொர்டன் டிப்ளமெசி என்ற இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையில் நிலவும் கடற்றொழிலாளர்  பிரச்சினை, இரண்டு நாடுகளின் ராஜதந்திர உறவுகளை பாதிப்பது மட்டும் இல்லாமல், 5 லட்சத்துக்கும் அதிகமான இந்திய இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது.

1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்படுதிக் கொள்ளப்பட்ட கடல்சார் உடன்படிக்கையின்படியே இந்தப் பிரச்சினை ஆரம்பித்துள்ளது.

ஏனைய நாடுகள் பலவற்றுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இவ்வாறான உடன்படிக்கைகளில், கடற்றொழில்துறை ஒத்துழைப்பு தொடர்பான இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால், இலங்கை இந்திய உடன்படிக்கைகளில் இவ்வாறான ஏற்பாடுகள் இல்லாமையே, இந்த பிரச்சினை தீர்க்கப்படாதிருப்பதற்கான பிரதான காரணம் என்று த மொர்டன் டிப்ளமெசி இணையத்தளம் தெரிவித்துள்ளது.

 

Related posts

எஸ்.எப் .லொக்கா கடத்திய சொகுசு ஜூப் வாகனம் மீட்பு!

CMI elects Murali Prakash as President at 18th AGM – [IMAGES]

දුම්රිය සාමාන්‍යාධිකාරී ධුරයෙන් ඉල්ලා අස්වී නැත.