விளையாட்டு

இலங்கை அணியில் இடம்பெறவுள்ள மாற்றம்

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஏலவே நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

நாளை இடம்பெறவுள்ள போட்டியில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, நாளைய போட்டியில் சகலதுறை வீரர் தசுன் சானக்க இலங்கை அணியில் இணைக்கப்படலாம் என நம்பப்படுகிறது.

அசேல குணரத்னவிற்கு பதிலாக அவர் இணைக்கப்படலாம்.

இதனுடன், சுழற்பந்து வீச்சாளர் சீக்குகே பிரசன்னவிற்கு பதிலாக வேக பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நாளைய போட்டியில் நியூசிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் டிரன் போல்ட்டுக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது.

அவருக்கு பதிலாக டக் ப்ரெஸ்வெல் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

பங்களாதேஷ் வீழ்த்தி, நியூசிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றியது

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கூரை மேல் ஏறி உண்ணாவிரத போராட்டம்!

அவுஸ்திரேலியாவின் புதிய தலைமை பயிற்சியாளருக்கு கொவிட்