விளையாட்டு

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் திடீரென பயணம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹாம் ஃபோர்ட் தனது நாட்டுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் அவரின் சேவை தொடர்பில் நிலையற்ற நிலைமை காணப்படுவதாக கிரிக்கட் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இலங்கை கிரிக்கட் அணியின் தெரிவுக் குழு தலைவராக அசங்க குருசிங்க நியமிக்கப்படவுள்ளதாக நம்பதகுந்த தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அசங்க குருசிஙக், 7 சதங்களையும், 8 அரைச் சதங்களையும் பெற்றுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் அவர் இரண்டு சதங்களை பெற்றுள்ள நிலையில், இவர் அதிகமாக 3 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக சிறந்த முறையில் திறமையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சனத் ஜயசூரியவிற்கு எதிராக முறைப்பாடு

எங்கள் கிரிக்கெட் வாழ்வு அல்ப அயுளில் முடிந்து விட்டது -சிகந்தர் ரஸா

அசேல குணரத்ன இலங்கை அணியிலிருந்து நீக்கம்