கிசு கிசு

இலங்கை அணியிடம் மண்டியிடத் தேவையில்லை – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிரடி

(UTVNEWS |COLOMBO) -பாகிஸ்தானுக்கான இலங்கை அணியின் திட்டமிடப்பட்டிருக்கும் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மீளாய்வு செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையினை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது மறுத்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ கிரிக்கெட் டுவிட்டர் தளத்தல் இது குறித்து தெரிவிக்கையில்;

“நாம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையினை கவனித்தோம், ஆனால் இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு தொடர்பான எந்த தகவலும் அல்லது உளவுத்துறை அறிக்கையும் உண்மையாக இல்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது இலங்கை அணிக்கு முழுமையான பாதுகாப்பினை வழங்கத் தயார் என தெரிவித்துள்ளது.”

எனினும், இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் குறித்த சுற்றுப்பயணத்திற்கு பின்வாங்குவதும் இலங்கை கிரிக்கெட் சபையானது பாதுகாப்பு தொடர்பில் அலட்டிக் கொள்வதும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சுமுகமாக போட்டிக்கு தடையாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு எச்சரிக்கை ஒன்று கிடைக்கப் பெற்றதாக நேற்றைய தினம் (11) இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்த அரசாங்கத்தை உடனடியாக கலைக்க வேண்டும்…

ரஜினி தொடர்பில் நாமல் கருத்து

பெண்களுக்கான ஓர் விசேட செய்தி…!