விளையாட்டு

இலங்கை அணி படு தோல்வி…

(UTV|COLOMBO) இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளையும் வெற்றிகொண்டு தென்னாபிரிக்க அணி 3:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் நான்காவது போட்டி நேற்று  போர்ட் எலிசபெத்தில் ஆரம்பமானது.

இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக இசுறு உதான 78 ஓட்டங்களையும், அவிஷ்க 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 32.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

 

 

 

 

Related posts

இலங்கை முன்னிலைக்கு வர ஓர் அரிய வாய்ப்பு

மகிழ்ச்சியானசெய்தி ; கிறிஸ்கெயில் ஒய்வு பெறவில்லை (video)

ஐபிஎல் போட்டிக்கு வரும் ‘குஜராத் டைட்டன்ஸ்’