வணிகம்

இறால்களின் விலை வீழ்ச்சி…

(UTV|PUTTALAM)-புத்தளம் மாவட்டத்தில் இறால்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

தற்போது இறால் அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், அவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இறால் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோகிராம் இறால் வளர்ப்பதற்கான உற்பத்திச் செலவு 800 ரூபாவாகவுள்ள நிலையில், விற்பனை விலை அவற்றின் பருமனுக்கேற்ப 770 ரூபா தொடக்கம் 870 ரூபா வரை அமைந்துள்ளதனால் தாம் நட்டமடைவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இதற்கான நிர்ணயவிலையை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

Related posts

நிலக்கடலை மற்றும் சோளத்திற்கான இறக்குமதி தடை

INSEE சீமெந்துக்கு இரண்டு சிறந்த முகாமையாளருக்கான விருதுகள்

உலக சந்தையில் தங்கத்தின் விலை