உள்நாடு

இறக்குமதியாகும் வாள்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாள்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை செய்யமாறும் சந்தேகநபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட 6 ஆயிரம் வாள்கள் எதற்காக? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும் எனக் கோரி பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால் ரீட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்ததற்கு அமைய இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி – டொலரின் பெறுமதியில் மாற்றம்!

நாட்டில் மீளவும் மின்தடை

ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது