உள்நாடுவணிகம்

இறக்குமதியாகும் பால்மாவுக்கான உச்சபட்ச விலை

(UTV | கொழும்பு) –  பால்மாவை விற்பனை செய்யவுள்ள உச்சபட்ச விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் முன்வைக்கப் பால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் பால்மாவின் உச்சபட்ச விலையை 1,300 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் உச்சபட்ச விலையை 520 ரூபாவாகவும் விற்பனை விலைகளாக நிர்ணயித்து முன்மொழிவு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீர்மானம் குறித்து, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதி லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Related posts

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு: அரசு EPF நிதியில் கைவைக்கின்றதா?

இலங்கை பொருளாதாரத்தில் வளர்ச்சி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று முக்கிய மாநாடு!