உள்நாடு

இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேகநபர்கள் கைது

(UTV | கொழும்பு) – மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்செத செவன மாடி வீட்டு தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு மாளிகாவத்தை பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜும்மா மஸ்ஜித் வீதி, மாளிகாவத்தை, கொழும்பு 10 என்ற விலாசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (03) புதுக்கடை இலக்கம் 04 நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, இரத்மலானை – சொய்சாபுர பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மேலும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்குலான பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 36 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 2 கிராம் 225 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (03) கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related posts

பாட்டளிக்கு எதிராக விவசாய அமைச்சர் சிஐடியில் முறைப்பாடு

ஜனவரி முதல் கடவுச்சீட்டுக்காக வரிசையில் நிற்கத்தேவையில்லை!

நீர் விநியோகம் சில மணித்தியாலங்களில் முழுமையாக வழமைக்கு