விளையாட்டு

இருபதுக்கு – 20 தொடரை கைப்பற்றியது இலங்கை

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று(09) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பந்து வீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, மூன்றாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

தொடரின் மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெற்று இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வௌ்ளையடிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது போட்டியின் சிறப்பாட்டக்காரர் மற்றும் தொடரின் சிறந்த வீரராக வனிந்து ஹசரங்க தெரிவானார்.

Related posts

டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா விலகல்

வைரலாக பரவும் ஹர்பஜனின் வீடியோ… (VIDEO)

நாடுதிரும்பிய ஆசிய மெய்வல்லுனர் போட்டி வீரர்கள்