விளையாட்டு

இருபதுக்கு – 20 உலக கிண்ண குறித்து இன்று இறுதி முடிவு

(UTV | இந்தியா) – ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இருபதுக்கு – 20 உலக கிண்ண குறித்து ஐசிசி இறுதி முடிவை இன்றையதினம் (20) அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18ம் திகதி முதல் நவம்பர் 15ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கிண்ண போட்டி நடைபெறுமா? என்பது சந்தேகமே. ஆனால் இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பலமுறை கூடியும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

இந்தத் தொடர் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்து விட்டது.

இதற்கிடையே ஐ.சி.சி. உறுப்பினர்களின் கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் 20 ஓவர் உலக கிண்ண போட்டி குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என அறிவிக்கப்படுகின்றது.

Related posts

கெய்லுக்கு 1½ கோடி இழப்பீடு?

என் வழி தனி வழி.. ஒரு விடியோவில் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த யுவராஜ்

ஷானகவின் சாதனையினை தன்வசப்படுத்தினார் முஹம்மத் இர்பான்