உலகம்

இரு நாட்டின் உறவு முக்கியமானது – சீனா

(UTV | பெய்ஜிங்) – சீனாவுடன் பொருளாதார ரீதியான உறவை முறித்தால் அது சிக்கலாக முடியும், இரண்டு நாட்டின் உறவு முக்கியம் என சீனாவின் வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா சீனா இடையே லடாக் மோதல் இன்னும் முடியாமல் தொடர்ந்து நடந்து வருகின்ற நிலையில், லடாக்கில் இருந்து இன்னும் சீனாவின் படைகள் மொத்தமாக வாபஸ் வாங்கவில்லை.

இன்னும் சீனாவின் படைகள் சில இடங்களில் உள்ளது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் சீனாவிற்கு பொருளாதார ரீதியாக இந்தியா எதிர்ப்பு காட்ட தொடங்கி உள்ளது. சீனாவின் செயலிகளில் கிட்டத்தட்ட 100 செயலிகள் இதுவரை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவிடம் தற்போது சீனா வெளிப்படையாக கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிற்கு எப்போதும் சீனா ஒரு எதிரியாக இருந்தது இல்லை. நாம் இருவரும் நட்பாகவே இருந்து இருக்கிறோம். இந்த உறவில் மாற்றம் ஏற்பட்டால் அது பெரிய பிரச்சனையாக மாறும்.

இந்தியா -சீனா உறவு என்பது ஒன்றாக பிணைந்தது. ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இருக்க முடியாது. இரண்டு நாடுகளும் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் நமது உறவின் நோக்கம். இரண்டு நாட்டின் பொருளாதரமும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கிறது. இதை முறிக்கும் வகையில் செய்லபட கூடாது என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாகிஸ்தானில் டிக் டொக் செயலிக்கு மீண்டும் தடை

ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்ட் டிரம்ப்

கனடா துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலி