சூடான செய்திகள் 1

இரு அமைச்சுகளின் மாற்றம் தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கிணங்க, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்னவால், அமைச்சரவை அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு ஆகிய இரு அமைச்சுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல், நேற்று(24) வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேவுக்கு, அந்த அமைச்சுக்கு மேலதிகமாக, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சும் கிடைத்துள்ளது.

மேலும், உல்லாசப் பயணத்துறை இராஜாங்க அமைச்சராகவுள்ள ரஞ்சித் அலுவிஹாரவுக்கு, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகார இராஜாங்க அமைச்சும் கிடைக்கவுள்ளது.

 

 

 

 

Related posts

நாலக டி சில்வா இன்று C.I.D முன்னிலையில்

கோட்டாவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் அதிகாரிகளுக்கு பணம் வழங்கி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வது தடை