உள்நாடு

இராஜகிரிய வாகன விபத்து – இருவருக்கு பிணை

(UTV|கொழும்பு)- இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியாக செயற்பட்ட திலும் துசித குமார மற்றும் வெலிக்கட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வாறு பிணை வழங்கியுள்ளது

2016 ஆம் ஆண்டு கொழும்பின் புறநகர் ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து ஒன்றின்போது முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏனைய இரு குற்றவாளிகளாக, பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியாக செயற்பட்ட திலும் துசித குமார மற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சுதத் அஸ்மடல ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

 

Related posts

கஜேந்தரகுமார் பொன்னம்பலம் வீட்டுக்கு முன்னாள் மீண்டும் பதற்றம் : குவிக்கப்பட்ட பாதுகப்புப்படை

நேற்று கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கடற்படையினர்

பாராளுமன்றத் தேர்தலில் 667, 240 வாக்குகள் நிராகரிப்பு – சமன் ஶ்ரீ ரத்நாயக்க

editor