சூடான செய்திகள் 1

இரத்த தான நிகழ்வில் 700ற்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் பங்கேற்பு

(UTV|COLOMBO)-24ஆவது படைத் தலைமையகத்தின் 5ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு படைத்தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் மஹிந்த முதசிங்க தலைமையில் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.

அம்பாறை ,பொலனறுவை ,தெஹிஅத்தகண்டிய ,மஹாஓயா மற்றும் கல்முனை போன்ற வைத்தியாசலைகளில் காணப்படும் இரத்த தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு இந்த இரத்ததான நிகழ்வு படைத் தலைமையகத்தில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அம்பாறை இரத்த வங்கியின் வைத்தியர் ஹன்ச ராமநாயக்கவின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் நோயளர்களுக்கான இரத்ததானத்தை சுய விருப்புடன் அதிகாரிகள் உள்ளிட்ட 700 படையினர் வழங்கினர்.

இந்த நிகழ்வில் அம்பாறை ,பொலனறுவை , தெஹிஅத்த கண்டிய மற்றும் மஹாஓயா போன்ற பிரதேசங்களின் 06 வைத்தியர்கள் மற்றும் 44 வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

24ஆவது படைத் தலைமையகத்தில் இரத்ததான நிகழ்வானது 03ஆவது முறை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த இரத்ததான நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களும் கலந்து கொண்டனர்.

 

 

 

Related posts

19வது திருத்த சட்டத்தை நீக்க அமைச்சரவை அனுமதி

பிரதமரின் அழைப்பை நிராகரித்தது ஐ.தே.க

புகையிரத பயணத்தில் தாமதம்