வகைப்படுத்தப்படாத

இரண்டு வாரங்களில் புதிய பரிமானத்துடன் பாரிய மாற்றங்கள் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – மீதொட்டமுல்லை அனர்த்தம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பான செயற்பாடுகள் அடுத்துவரும் ஒரு மாதத்தில் நிறைவுசெய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் அடுத்த இரண்டு வாரங்களில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் புதிய பரிமானத்துடன் பாரிய மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், 5 பில்லியன் டொலர் முதலீட்டுடன் இலங்கையின் பொருளாதாரம் நிலையான தன்மையுடன் சரியான பாதையில் பயணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Final verdict of Gamini Senarath’s case on Aug. 08

ஈரான்-ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்

பிரத்யேக சேவை நிலையத்தை காலியில் தொடங்கும் vivo