கேளிக்கை

இரண்டு பாகங்களாக உருவாகும் ‘விடுதலை’

(UTV | சென்னை) – தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில் விடுதலை படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விடுதலை இரண்டாம் பாகத்தில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளதாகவும், தற்போது சிறுமலை மற்றும் கொடைக்கானலில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொடைக்கானலில் படத்தின் ஆக்‌ஷன் காட்சியை படமாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பல்கேரியாவில் இருந்து தமிழகம் வந்திருக்கும் ஸ்டண்ட் டீம் பிரபல ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் தலைமையில் இந்த ஆக்‌ஷன் காட்சியை அமைக்கின்றனர். விடுதலை படத்தின் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

‘மாயவன்’ திரைப்படத்தின் அறிவிப்பு

திருமணமா? பரவும் தகவல் பற்றி விஷாலின் அதிரடி பதில்

பிரபல கவர்ச்சி நடிகை தற்கொலை மரணம்?