உள்நாடு

இரண்டாவது நாளாக சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – சுகாதார சேவையாளர்கள் இரண்டாம் நாளாக இன்று (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாதியர், இடைநிலை வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் நேற்று (24) முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளன.

சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று வைத்தியசாலைக்கு சென்றிருந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முழு நாட்டையும் எப்பொழுதும் முடக்கி வைக்க முடியாது

‘வன்னிச் சமூகங்களை குழப்பி வாக்கு வேட்டையாட சிலர் சதி

முத்துராஜவெல மனு மார்ச்சில் விசாரணைக்கு