விளையாட்டு

இரண்டாவது டி-20 போட்டியில் நியூஸிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் 2 க்கு 0 என்ற நிலையில் நியூஸிலாந்து அணி முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கண்டி – பல்லேகலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை அணி சார்பில் நிரோஷன் திக்வெல்ல 39 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணான்டோ 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் செட் ரேன்ஸ் 3 விக்கெட்களையும் டிம் சௌதி மற்றும் ஸ்கெட் குக்லைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

அதன்படி, 162 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய நியூஸிலாந்து அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

நியூஸிலாந்து அணி சார்பில் கிராண்ட் ஹோம் 59 ஓட்டங்களையும் டொம் புரூஸ் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் அகில தனஞ்சய 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

Related posts

நான் மனிதனாக மாறியதற்கு காரணம் அவரே

ஸ்மித், வோனர் இருவருக்கும் 1 வருட போட்டித்தடை

விலகும் தப்ராஸ் ஷம்ஸி