சூடான செய்திகள் 1

இரண்டாம் கட்ட திருத்தப்பணிகள் நாளை முதல்

(UTV|COLOMBO)-சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியின் இரண்டாம் கட்ட பணிகள் நாளை தொடக்கம் எதிர்வரும் 17ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

திருத்தப்பணிகளுக்காக பயன்படுத்தப்படும் 26 பாடசாலைகளில் 4 பாடசாலைகள் குறித்த காலப்பகுதியில் முழுமையாக மூடப்படவுள்ளதாக அவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இரண்டாம் கட்ட திருத்தப்பணிகள் இடம்பெறும் மற்றைய 22 பாடசாலைகளும் பகுதியளவில் மூடப்படவுள்ள நிலையில் , குறித்த பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் வழமைப்போல் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

 

Related posts

”எனது முதலாம் ஆண்டு நிறைவு விழா தேவையில்லை” அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி

ICC இன் விஷேட காரியாலயம் இலங்கையில்

மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு அமுலுக்கு