உலகம்

இரண்டாக பிளந்த விமானம் – பலி எண்ணிக்கை உயர்வு

(UTV|இந்தியா ) -கேரளாவில் நேற்றிரவு நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு 190 பேருடன் பயணித்த விமானம் தரையிறங்க முற்பட்ட போது ஓடுதளத்தில் வழுக்கிக்கொண்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளானது.

விபத்தில் விமானம் இரண்டு பாகங்களாக உடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

மீட்பு படையினர் விரைந்து சென்று விமான இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

கேரள விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இதில் விமானி, துணை விமானியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 173 பேரும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவிற்கு வரும் முதல் ஆபத்து இலங்கையிலிருந்தே வரும் – வைகோ

கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல்

மகஸ்ஸார் பகுதியில் தேவாலயம் ஒன்றுக்கருகில் குண்டு வெடிப்பு