உள்நாடு

இரட்டை குழந்தைகளை விற்ற இளம் தாய் கைது!

(UTV | கொழும்பு) –

பிலியந்தலைப் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் தனது இரட்டை குழந்தைகளை விற்பனை செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த இரட்டை குழந்தைகளை தலா 25,000 ரூபாவுக்கு இருவருக்கு விற்ற நிலையில், குழந்தைகளை வாங்கிய இரண்டு பெண்களும் இன்று காலை கைது செய்யப்பட்டதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இரட்டைக் குழந்தைகளின் இளம் தாய் மற்றும் ஒரு குழந்தையை வாங்கிய பெண்ணொருவர் ராகம பிரதேசத்திலும் மற்றைய குழந்தையை விலைக்கு வாங்கிய பெண் களனி பிரதேசத்திலும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராகம பிரதேசத்தில் வீட்டு வேலை செய்து வந்த குறித்த தாய் கொழும்பு காசல் மகப்பேறு வைத்தியசாலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி

மியன்மார் இராணுவ ஆட்சியுடன் இலங்கை – வலுக்கும் சர்வதேச எதிர்ப்புகள் [VIDEO]

சபாநாயகர் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்

editor