உள்நாடு

இம்முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இல்லை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இம்முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைப்பதில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் உட்பட இரண்டு வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்களை அழைப்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு இதற்கு முன்னர் எண்ணியிருந்த போதிலும், நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று நோய் நிலைமை காரணமாக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைப்பதில்லை என தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தினை நேற்றைய தினத்தில் இருந்து 24 மணி நேரமும் இயங்க வைக்குமாறு மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஏன் போதைப்பொருளை தடுக்க வேண்டும்?

செவிப்புலனற்ற முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவின் கன்னி உரை

editor

வெங்காயம் விலை மாற்றம் !