விளையாட்டு

இப்போதைக்கு அதில் மட்டும் கையை வைக்க மாட்டாராம் கோலி!!

(UDHAYAM, COLOMBO) – வீரர்களிடம் தாடிக்கு ஓய்வு கொடுப்போம் என்ற ஜடேஜா கோரிக்கையை நிராகரித்துள்ள விராட் கோலி, இப்போதைக்கு தாடிக்கு விடைகொடுக்க தயாராகயில்லை என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் தாடி வைப்பது தற்போது ஒரு கலாசாரமாக மாறி விட்டது. அணியின் தலைவர் விராட் கோலி தாடியுடன் தான் வலம் வருகிறார். பெரும்பாலான வீரர்கள் அவரது பாணியை பின்பற்றி தாடி வளர்த்தனர்.

இந்த நிலையில் கோடைகாலத்தை யொட்டி ரோகித் சர்மா (மும்பை), ரவீந்திர ஜடேஜா (குஜராத் லயன்ஸ்), ஹர்திக் பாண்ட்யா (மும்பை) தாடியை மழித்து ஸ்டைலை மாற்றியுள்ளனர்.

களத்தில் ஆட்டத்தை மாற்றுவோம். வீரர்களின் ஓய்வறையில் நமது தோற்றத்தை மாற்றுவோம். தாடிக்கு ஓய்வு கொடுப்போம் என்று ஜடேஜா டுவிட்டரில் கூறியிருந்தார்.

ஆனால் அவரின் கோரிக்கையை நிராகரித்துள்ள விராட் கோலி, இப்போதைக்கு தாடிக்கு விடைகொடுக்க தயாராகயில்லை என்று கூறியுள்ளார்.

Related posts

ஐசிசி இனது சிறந்த T20 அணியின் தலைமைக்கு பாபர் ஆஸம்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரை கைது செய்ய உத்தரவு

தனிமைப்படுத்தப்பட்ட சங்கக்கார