சூடான செய்திகள் 1

இன்றைய தினம் இரண்டாவது இடைக்கால அறிக்கை சட்டமா அதிபரிடம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் கண்டறிவதற்காக, நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பில், தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியவர்களைக் கண்டறிவதற்காக உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவில் முதலாவது அறிக்கை அண்மையில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,தற்போது இரண்டாவது அறிக்கை நேற்றைய தினம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,இரண்டாவது இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கமைவாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்த அறிக்கை இன்றைய தினம் சட்டமா அதிபரிடம் பொறுப்பளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

பொலிஸ் மா அதிபர் இன்று அரசியலமைப்பு சபையில் முன்னிலை

பதவி ஏற்ற அமைச்சர் எஸ் பி

நேபாளத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு