உள்நாடு

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) -நாட்டில் பெரும்பாலான பாகுதிகளில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (23) மழையுடன் கூடிய வானிலை நிலவும் என தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Related posts

வெட்டு காயங்களுடன் வீதியில் கிடந்த நபர் உயிரிழப்பு

 களுத்துறை மாணவி மரணம் – புதிய திருப்பம்

மலேசியாவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் தாயகத்திற்கு