உள்நாடுசூடான செய்திகள் 1

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுலில்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு  நாடாளாவிய ரீதியில் இன்று (25) மற்றும் நாளை (26) ஆகிய இரு தினங்கள்  முழுமையாக ஊரடங்கை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இதற்கமைய, நேற்று (24) இரவு 8.00 முதல் 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5.00 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்குமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களைத் தவிற ஏனைய 18 மாவட்டங்களில் கடந்த 20 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்பட்டது. ,

எனினும் இரவு 8.00 மணி தொடக்கம் காலை 5.00 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளியேறவும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமுலில் உள்ள நேரங்களில் அத்தியாவசிய சேவைகள், விவசாய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதி சபாநாயகர் பதவிக்கு இரு பெயர்கள் முன்மொழிவு

சர்வதேச சட்டத்தரணிகள் கூட்டத்தொடரில் – இலங்கை சார்பில் அஜ்ரா அஸ்ஹர்.

மேலும் 40 பேர் பூரணமாக குணம்