உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு

(UTV | கொழும்பு) – இன்றைய தினமும் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே P முதல் W வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும், மாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 50 நிமிடங்களும், மின்துண்டிப்பினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Power-Interruption-Schedule – [28-03-2022]

Related posts

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மனுத்தாக்கல் [UPDATE]

கொவிட் தொற்றுக்குள்ளான தாய்க்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

Clean Sri Lanka தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்த தீர்மானம்

editor